health tips
ரத்த அழுத்தம், இதய நோய் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்கும் மலிவான காய்கறி
இது வறுத்தெடுக்கும் கோடை காலம். வீட்டை விட்டு வெளியே சென்றால் அக்னி வெயில் வாட்டி வதைக்கிறது. எங்காவது ஒதுங்க நிழலான இடம் கிடைக்காதா என்று கண்கள் அலைபாயும்.
அந்த வகையில் நமக்கு ஏதாவது குளிர்ச்சியான உணவுப்பொருள் கிடைக்காதா என நா வறண்டு போய் தவிக்கும்.
இன்று பஸ், ரெயிலில் ஏறினால் போதும். பெரிய ஊரானாலும் சரி. சிறிய ஊரானாலும் சரி. வெள்ளரி… வெள்ளரி என விற்பனை படுஜோராக நடந்து கொண்டு வருகிறது.
அதை அழகாக சீவி வகுந்து அதில் மிளகாய்ப்பொடி தூவி பாக்கெட்டுகளில் அடைத்து தருகின்றனர். சாப்பிட சாப்பிட பசியும் ஆறுகிறது. வயிற்றுக்கும் நல்ல மருந்தாகிறது. இந்த வெள்ளரிக்காயில் வேறு என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று பார்க்கலாமா…
இது நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறி. கோடைகாலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. சருமத்தின் ஆரோக்கியத்திலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், பொட்டாசியம் என பலவிதமான சத்துக்கள் உள்ளன.
இதயத்தில் உண்டாகும் நோய் அபாயத்தைத் தடுக்கிறது. உடல் எடையை சரிவிகிதத்தில் வைத்துக் கொள்கிறது. உடலில் இருந்து தேவையற்ற நச்சுக்கழிவுகளை வெளியேற்றுகிறது. கண் பாதுகாப்பு, புற்றுநோய்க்கு சிகிச்சை, ரத்தத்தை சுத்திகரித்தல் ஆகிய வேலைகளில் வெள்ளரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தொப்பை குறைய வேண்டுமா? தினமும் வெள்ளரிக்காய் சாற்றைப் பருகலாம். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குகிறது.
இது ரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகிறது. அழகு பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை மசித்துக் கூழாக்கி ஃபேஸ் பேக் போடலாம்.
இது முகத்தைப் பளபளப்பாக்கும். புத்துணர்ச்சியைத் தரும்.
முகம், கண்கள், கழுத்துப்பகுதியில் இந்த பேஸ் பேக்கைப் போடலாம். கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்கள் விழாமல் பாதுகாக்கிறது.
வெள்ளரியில் உள்ள அஸ்கார்பிக் அமிலம், காஃபிக் அமிலம் ஆகியவை உடலின் தசைநார்களையும், எலும்புகளையும் வலுப்படுத்த உதவுகின்றன.