Connect with us

latest news

மாணவர்களின் கவனத்திற்கு…! நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

Published

on

நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலானது கடந்த மே 27ஆம் தேதி வெளியாகி இருந்தது. இதில் தமிழக உயர்கல்வி துறையின் கீழ் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றது. இதில் காலியாக இருக்கும் 1,07,029 இளநிலை படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப தேதி கடந்த மே 6ம் தேதி தொடங்கி 24ஆம் தேதி உடன் நிறைவு பெற்றது.

இதில் 2,58,527 பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். மேலும் 2,11,010 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட இருக்கின்றது. முதலில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வு முடிவடைந்து.

பிறகு பொது பிரிவு மாணவர்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலும் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இதற்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை அதாவது ஜூலை மூன்றாம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை tngasa.in என்ற இணையதளத்தில் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

google news