Connect with us

latest news

தமிழகத்தில் குறைந்த குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை… ஆனா இது அதிகமா இருக்கே…!

Published

on

தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது குறைந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங் பேடி இந்த வருடம் குழந்தையின் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று தமிழக மருத்துவர் கௌரவிக்கும் விதமாக மருத்துவ தின நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இதை தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பிறந்த 1000 குழந்தைகளில் 13 குழந்தைகள் என்ற அளவிற்கு இறப்பு விகிதம் இருந்த நிலையில் கடந்த மாதத்தில் 1000 குழந்தைகளுக்கு 9 குழந்தைகள் என்ற அளவில் இறப்பு விகிதம் குறைந்து இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும் ஐஎம்ஆர் என்ற அமைப்பு மூலமாக பிறந்ததிலிருந்து ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் கணக்கிடப்படும்.

 

இதில் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படும் பிரசவ இறப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றனர். இந்த தரவுகளின் படி குழந்தை இறப்பு எண்ணிக்கை ஒன்பதாக குறைந்துள்ளது உறுதியாக இருக்கின்றது. இந்திய அளவில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 2020 தரவுகளின் படி ஆயிரம் குழந்தைகளுக்கு 28 குழந்தைகள் என்று அளவில் இருக்கின்றது.

மேலும் தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரம் என்று இருந்த மகப்பேறு மரணம் தற்போது ஒரு லட்சத்து 48 ஆயிரம் குறைந்துள்ளது. ஆனால் சமீப காலங்களில் உடல் பருமன், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக தமிழகத்தில் சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. தமிழகத்தில் நடக்கும் 70% பிரசவங்கள் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நடக்கின்றது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *