india
வெள்ளத்தில் மிதக்கும் அசாம்!. 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு!…
தொடர்மழை காரணமாக அசாமில் வசிக்கும் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளும் நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகம் என எல்லோரும் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோலகட் என்கிற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளை மாநில முதல்வார் ஹிமந்தா பிஸ்வா சர்மா பார்வையிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்.
ஒருபக்கம், குஜராத் மாநிலத்திலும் மழை பெய்து வருவதால் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள 30 கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 36.1 செண்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. பல இடங்களில் மழை வெள்ளத்தால் சாலைகள் மூழ்கிக் கிடக்கிறது.