Connect with us

india

சத்துணவு சாப்பாட்டில் செத்து கிடந்த சிறிய வகை பாம்பு… ஷாக்கான பெற்றோர்கள்… பரபரப்பு புகார்…!

Published

on

அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு உயிரிழந்து இருப்பதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் சத்துணவு திட்டத்தின் மூலமாக கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6  மாதம் முதல் 3 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கு உணவு பொட்டலம் வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி சாங்கிலி மாவட்டம், பாலஸ் என்ற பகுதிக்கு உட்பட்ட அங்கன்வாடி மையம் ஒன்றில் கடந்த ஒன்றாம் தேதி குழந்தைகளுக்கு சத்துணவு பொட்டலம் வழங்கப்பட்டது.

இந்த பொட்டலத்தில் இறந்த நிலையில் சிறிய வகை பாம்பு இருப்பதை பார்த்த பெற்றோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சங்கிலி மாவட்ட கலெக்டர் ராஜா விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கின்றார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அங்கன்வாடியில் ஆய்வு நடத்தி உணவை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த குடோன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் இருக்கும் பெற்றோர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கிடையே பாலஸ் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் விஷ்வஜித் கடாம், சட்டப்பிரிவையில் இப்பிரச்சனையை குறித்து பேசி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

google news