latest news
விஷ சாராய உயிரிழப்பு… ரூ.10 லட்சம்லா ரொம்ப ஜாஸ்தி… ஒரே போடாய் போட்ட சென்னை ஹைகோர்ட்…!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து இதுவரை 65க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகத்தின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்கள் அருந்திய சாராயத்தில் அதிக அளவு மெத்தனால் கலந்திருந்த காரணத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தல பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த முடிவை எதிர்த்து சென்னையை சேர்ந்த முகமது கோஸ் என்பவர் ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோதமானது. அதனை குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது.
தீவிபத்து, வாகன விபத்து உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி பலியானவருக்கு குறைந்த அளவு இழப்பீடு வழங்கும் நிலையில் விஷ சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எப்படி அதிக இழப்பீடு வழங்கப்படுகின்றது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். விஷ சாராய குடித்து உயிர் இழந்தவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களோ, தியாகிகளோ சமூக சேவகர்கலோ அல்ல. அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதி மதி முகமது சபிக் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பத்து லட்சம் இழப்பீடு என்பது மிக அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். இந்த விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்கள்.