Connect with us

Cricket

டி20 உலகக் கோப்பை வெற்றி படங்களில் இருக்கும் குங்குமப் பொட்டுக்காரர் யார் தெரியுமா?

Published

on

இந்திய டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் வெளியான விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் புகைப்படங்களில் ஒரு குங்குமப் பொட்டுக்காரர் இருப்பதை பார்க்க முடியும். அவர் யார்  என்ற ஆச்சரிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

அவர் தான் ராகவேந்திரா. சுருக்கமாக ரகு. இவர் குறித்து 2017ம் ஆண்டே முக்கிய வீரரான விராட் கோலி, ரகுவால் தான் என் பேட்டிங் திறன் மேம்பட்டது. உலகின் எந்த ஒரு அதிவேகப் பந்து வீச்சையும் எதிர்கொண்டு விளையாட காரணமே ரகு தான் என பாராட்டியிருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் கூட ரகு குறித்து பெருமையாகவே பேசி இருக்கின்றனர்.

சின்ன வயதிலே கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகமிருந்தவர் வீட்டை விட்டு வெளியேறினார். 21 ரூபாய் பணத்துடன், வீட்டை விட்டு வெளிவந்த ரகு நேராக சென்ற இடம், வட கர்நாடகாவில் உள்ள ஹூப்பாளி என்ற ஊரில் செயல்படும் கர்நாடக மாநில கிரிக்கெட் அகாடமி.

இந்த அகாடமியில் சேர வேண்டும் என்பதே அவர் ஆசை. ஆனால் முதல் வாய்ப்பும் தோல்வி. இருந்தும் அந்த ஊரிலே இருந்து தொடர்ச்சியாக அகாடமி வாய்ப்புக்காக காத்திருந்தார். இப்படியான சூழலில் ஒருநாள் அந்த அணியின் மூத்த பயிற்சியாளர் சிவானந்த் குஞ்சால் ரகுவிற்கு வாய்ப்பு கொடுத்தார்.

இப்படி இருக்க ஒருநாள் பயிற்சி ஆட்டத்தின் போது ரகுவின் கைமுறிந்தது. இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு வந்தார். அப்போதும் மனம் தளாராதவர். விளையாடவில்லை என்றாலும் பயிற்சியாளராக இருக்க வேண்டும் என முடிவெடுத்தார். இந்த அகாடமியின் பயிற்சியாளர் ரகுவிடம் நீ நன்றாக பந்தை எறிகிறாய். பெங்களூர் செல் எனக் கூறி த்ரோடவுன் ஸ்பெஷலிஸ்ட் எனக் குறிப்பிட்டு கடிதம் கொடுத்தார்.

கர்நாடக மாநில ரஞ்சி டிராபி அணிக்கான த்ரோடவுன் பவுலராக ரகு பணி செய்து கொண்டிருந்தார். 150கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் அவர் பந்துகள். நான்கரை வருடங்கள் ரகு பயிற்சியாளராக இருந்தாலும், இதற்காக ஒரு ரூபாய் கூட அவர் சம்பளமாகப் பெறவில்லை. அதை தொடர்ந்து 2008களில் நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது.

சச்சின், ராகுல் டிராவிட், தோனி, சேவாக், விராட் கோலி, ரோஹித் சர்மா என அனைவருக்கும் ரகு த்ரோ டவுன் பவுலராக இருந்திருக்கிறார். ஒருகாலத்தில் படுக்க கூட இடம் இல்லாதவர். இன்று இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். நாடு நாடாக அவர்களுடன் சுற்றி வருகிறார். இவரை உலகம் முழுவதும் இருக்கும் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு அணிக்கு பயிற்சியாளராக வரும்படியும், அதற்காக கோடிகளைக் கொட்டித் தரவும் தயாராக இருந்தாலும் ரகு அதை மறுத்துவிட்டார். தான் எப்போதுமே இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதே லட்சியம் எனக் கூறிவிட்டாராம்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *