Connect with us

india

இப்படி குழந்தை பெரும் பெண்களுக்கும் மகப்பேறு விடுப்பு இருக்கு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!

Published

on

வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம் என்று ஒடிசா ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பல பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகின்றது. இப்படி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத பெண்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். இந்த நடைமுறை தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்ற பெண் ஒருவர் ஒடிசா கோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருந்தார்.

அதில் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றதால் தன்னுடைய பணியிடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கவில்லை என்றும், தனக்கு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஒடிசா சேவை குறியீடு 194 கீழ் பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும்.

ஒரு வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். ஆனால் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு இந்த சலுகை கிடையாது என்று தெரிவித்தார். மேலும் ராஜஸ்தான் ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிபதி வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும்.

அவர்களுக்கு மற்ற பெண்களைப் போன்று சமமான உரிமை மற்றும் ஆதரவு கிடைக்க வேண்டும். ஒரு குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு தாயின் பராமரிப்பு என்பது மிக முக்கியமானது. அதை கருத்தில் கொண்டு வாடகை தாய் மூலமாக குழந்தை பெறும் தாய்மார்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து மனுதாரர்களுக்கு 180 நாட்கள் விடுமுறை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வாடகை தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்குவதற்கான சலுகைகளை உருவாக்குவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

google news