Connect with us

india

125 கோடி கூட இன்னும் ஒரு 11 கோடி… இந்திய கிரிக்கெட் அணிக்கு மற்றொரு பரிசுத்தொகை… மகாராஷ்டிரா அரசு அதிரடி..!

Published

on

உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு மகாராஷ்டிரா அரசு 11 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்கா அணியை இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இது இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதைத்தொடர்ந்து தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்டமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடுவதற்கு நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்ஸில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்கள். கிரிக்கெட் வீரர்களை காண மும்பையில் ஏகப்பட்ட ரசிகர்கள் படையெடுத்ததால் அந்தப் பகுதியே ஸ்தம்பித்து போனது. இந்திய வீரர்கள் திறந்த வெளி பஸ்ஸில் உலக கோப்பையுடன் பேரணியாக சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது.

அதைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையினை bcci செயலாளர் ஜெய்ஷா வழங்கியிருந்தார். இந்நிலையில் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.

google news