Connect with us

india

மனிதர்களுக்கு வரப்போகும் பேராபத்து… பூமியை தாக்க வரும் ராட்சச விண்கல்… எச்சரிக்கும் இஸ்ரோ தலைவர்…!

Published

on

ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வருகிற 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பூமியை தாக்கும் என கூறப்படுகின்றது.

விண்கல் பூமியை தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சி இடங்கள் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் இன்னும் 16 வருடங்களில் சரியாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அந்த விண்கல் பூமியை தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறியிருந்தனர்.

இதிலிருந்து தற்காத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்று கூறுகிறது.  இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கின்றார் அதில் அவர் கூறியிருந்ததாவது அபோபிஸ் என் ராட்சச அளவிலான விண்கல் ஒன்று வரும் 2029 ஏப்ரல் 13ஆம் தேதி பூமியை கடக்கும் என கண்காணிக்கப்படுகின்றது.

இந்த விண்கல் மீண்டும் 2036 ஆம் ஆண்டு பூமியை தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமியை தாக்கும்போது மனித குலத்துக்கு அதிகம் ஆபத்து ஏற்படும். வரலாற்றில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவு நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. பூமிக்கு எதுவும் ஆகக்கூடாது என்று தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது.  அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை எதிர் கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

google news