Connect with us

india

1 மணி நேரம், 9,000 கிலோ… வெற்றி கொண்டாட்டத்தின் மறுபக்கம்… ஸ்தம்பித்த மும்பை நகரம்…!

Published

on

மும்பையில் நடைபெற்ற கிரிக்கெட் வீரர்களின் பேரணிக்குப் பிறகு குவிந்து கிடந்த குப்பைகளை மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்திருக்கிறார்கள்.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. டி20 உலக கோப்பையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தனக்கு சொந்தமாக இருக்கிறது இந்திய அணி. இதனை ஒட்டுமொத்த இந்தியாவும் உற்சாகமாகக் கொண்டாடியிருந்தது. மகுடம் சூட்டிய இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்ப முடியாமல் இரண்டு நாட்கள் கழித்து தனி விமானம் மூலமாக இந்தியாவிற்கு வந்தடைந்தனர்.

ஏறக்குறைய 16 மணி நேர பயணத்திற்கு பிறகு வீரர்களின் விமானம் வியாழன் கிழமை காலை 6 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அதன் பின்னர் இந்திய அணியினர் டெல்லியில் இருந்து விமானத்தில் மும்பைக்கு வந்தனர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் திறந்த பஸ்ஸில் பிரம்மாண்ட வெற்றி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பேரணி மாலை 5 மணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாகவே மும்பை மெரின் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஊர்வலம் தொடங்க தாமதமானதால் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி போனது. மும்பை மாநகரம் இரவு 7:30 மணிக்கு வீரர்கள் சிறந்த பஸ்ஸில் உலக கோப்பையுடன் பேரணியாக வந்தார்கள்.

இரு புறமும் குடியிருந்த ரசிகர்கள் வெள்ளத்தில் பஸ் மிதந்து வந்தது. சுமார் ஒரு மணி நேரம் மும்பை ஸ்தம்பித்து போனது. ரசிகர்கள் கூட்டத்தில் ஆங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பேரணி முடிந்த பிறகு மும்பையின் மெரின் டிரைவ் பகுதியில் ஆங்காங்கே காலணிகள் சிதறி கிடந்தன.

உடனே களத்தில் இறங்கிய மும்பை மாநகராட்சி ஊழியர்கள் சுமார் ஒன்பதாயிரம் கிலோ குப்பைகளை அகற்றி பகுதிகளை சுத்தம் செய்தார்கள். உணவு பொட்டலங்கள், பாட்டில்கள், செருப்புகள் என்று மறுநாளே அப்பகுதியில் இருந்த அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. மும்பை மெரின் ட்ரைவ் என்பது விஐபி மற்றும் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் அதிகம் பயணம் செய்யும் பகுதி என்பதால் மறுநாளே அதனை சுத்தம் செய்து விட்டனர்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *