Cricket
கிரிக்கெட்டர் அபிஷேக் சர்மாவின் செஞ்சுரிக்கு பின்னால் இப்படி ஒரு சீக்ரெட்டா?
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தன்னுடைய இரண்டாவது போட்டியில் சதம் விளாசி இருக்கிறார் அபிஷேக் சர்மா. நூறு அடித்த போட்டியில் அவர் பயன்படுத்திய பேட் அவருடையது இல்லையாம்.
47 பந்துக்கு 100 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மா, இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய ஜிம்பாவே அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேலும் ஐந்து போட்டி கொண்ட தொடரில் 1-1க்கு என்ற சமநிலையில் இருக்கிறது.
23 வயதாகும் அபிஷேக் சர்மா முதல் செஞ்சுரியை சுப்மன் கில் பேட்டில் தான் அடித்து இருக்கிறார். எப்போதெல்லாம் போட்டி அழுத்தமாக இருக்கிறதோ அந்த சமயத்தில் சுப்மன் கில்லிடம் பேட்டினை வாங்கி விளையாட வந்துவிடுவாராம். அபிஷேக் சர்மாவை பயிற்சி செய்தது இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.
இந்த போட்டியில் அபிஷேக் சர்மா 8 சிக்ஸர்களையும், 7 ஃபோர்களையும் அடித்தார். இவரின் ஸ்டைக் ரேட் 212.77 இருந்தது. பின்னர் இடது கை ஸ்பின்னர் வெல்லிங்டன் மசாகட்சா பந்தில் அவுட்டாகினார். அண்டர் 12ல் இருந்து அபிஷேக் மற்றும் சுப்மன் இருவரும் இணைந்து விளையாடி வருகின்றனர்.
இந்திய நாட்டுக்காக அபிஷேக் தேர்வான போது சுப்மன் தான் முதலில் கால் செய்தாராம். அபிஷேக் அழுத்தமான போட்டிகளில் சுப்மன் பேட்டை வாங்குவதை அண்டர்12ல் இருந்தே செய்து வருகிறாராம். ஐபிஎல்லில் கூட இதை செய்து இருக்கிறார். தன் தந்தை மற்றும் பயிற்சியாளர் யுவராஜுக்கு தான் பயமில்லாமல் விளையாடியதுக்கு காரணம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
முதல் டி20 போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆன நிலையில் இரண்டாவது போட்டியில் ஆடிய ஆகவேண்டிய நிலை இருந்தது. இருந்தும் பதற்றப்படாமல் சரியாக கணித்து விளையாடிய அபிஷேக் ஆச்சரியத்தினை நிகழ்த்தி இருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.