Connect with us

india

தமிழ்நாட்டுக்கு இம்புட்டு தண்ணீர் வரப்போகுதா… ஒரே போடாய் போட்ட காவேரி ஒழுங்காற்று குழு… அதிர்ச்சியில் கர்நாடகா..!

Published

on

தமிழகத்திற்கு தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவுக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகின்றது. இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக தான் காவிரி மேலாண்மை ஆணையம் காவேரி நீர் ஒழுங்காற்று குழு என்ற ஒரு அமைப்பை 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. தண்ணீர் திறப்பு தொடர்பாக இந்த குழு எடுக்கும் பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்யும்.

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க முடியாது என்று கர்நாடகா அரசு விடாப்பிடியாக இருந்து வருகின்றது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரில் பாதி தான் வந்தது. ஜூன் மாதம் வரை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வரவில்லை. மேலும் மேட்டூர் அணை மட்டம் சரிந்ததால் குருவை பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த மாத இறுதியில் இது தொடர்பாக காவிரி மேலாண் ஆணைய கூட்டம் நடைபெற்றது.

ஜூன், ஜூலை மாதத்திற்கான நிலுவை தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. தங்களுக்கே குடிநீர் பஞ்சம் இருப்பதால் தண்ணீரை திறந்து விட முடியாது என்று கர்நாடகா அரசு தெரிவித்துவிட்டது .இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. காவேரி படுக்கையில் உள்ள கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் நீர் வரத்து அதிகரித்து இருக்கின்றது.

கர்நாடகா அணையில் இருந்து தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இதனால் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் வருகின்றது. அதே சமயம் கூடுதல் தண்ணீர் திறக்கவும் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99 ஆவது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில் நாளை முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தினமும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அணைகளுக்கு வரும் நீரின் அளவு 28% குறைவாக இருப்பதாலும் நீர் திறப்பது தொடர்பான எந்தவிதமான முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் ஜூலை 25க்கு பிறகு எடுக்கப்படும் என்று கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு தரப்பில் கடந்த வருடம் போதுமான நீரை திறந்து விடவில்லை. தற்போது அணைகளில் போதுமான அளவு நீர் இருக்கின்றது. இருப்பினும் நீர் திறந்து விடாமல் இருந்து வருகிறார்கள் என்று வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

google news