Connect with us

latest news

என்னது… பாலாறுல ஆந்திரா அணை கட்டப்போகுதா…? துரைமுருகன் கொடுத்த ரியாக்ஷன்…!

Published

on

பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் துரைசாமி தெரிவித்து இருக்கின்றார்.

தமிழகத்திற்கு கர்நாடக மாநிலத்துடன் காவேரி பிரச்சனை ஒரு பக்கம், கேரளாவுடன் முல்லைப் பெரியாறு பிரச்சனை, மற்றொரு பக்கம் ஆந்திரா உடன் பாலாறு பிரச்சனை என்று நதிநீர் பங்கீடு பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே மாதவபள்ளி மற்றும் யாதவபள்ளி உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

இதன் மூலம் குப்பம் மற்றும் சுற்றுப்புறங்களில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தீர்வு கிடைக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆந்திராவில் வெறும் 33 கிலோமீட்டர் மட்டும்தான் பாலாறு இருக்கும். தமிழ்நாட்டில் 222 கிலோமீட்டர் பாய்ந்து பின்னர் கடலில் கலந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் வட மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாலாறின் தண்ணீரை நம்பி தான் இருக்கின்றது.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை கைவிட வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது “புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளதால் தடுப்பணை கட்டுவோம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பாலாற்றில் ஆந்திரா அரசு அணை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். கர்நாடகாவில் ஒரு கட்டத்திற்கு பிறகு அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாது அல்லவா? அணை நிரம்பிய பிறகு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டு தான் ஆக வேண்டும். நீர் நிலைகளில் மண் எடுக்க விவசாயிகளுக்கும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். மண் எடுப்பதற்கான முறைப்படுத்தலை அதிகாரிகள் வழங்குவார்கள்” என்று தெரிவித்தார்.

google news