Connect with us

latest news

கோவில்ல செய்ற வேலையா இது…? திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம்… கைதாவாரா டிடிஎஃப் வாசன்…?

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிடிஎஃப் வாசன் பிராங் செய்த வீடியோவுக்கு தேவஸ்தானம் சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற கோவில்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் ஒன்று. அங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். மணி கணக்கில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மட்டுமல்லாமல் வார நாட்களிலும் இங்கு கூட்டம் அலைமோதி வருகின்றது .

மழை, வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று இலவச தரிசனத்திற்காக 32 அறைகளும் நிரம்பி வழிந்தது.  18 மணி நேரத்திற்கு மேலாக நின்று மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தார்கள். இந்நிலையில் சர்ச்சைக்கு பேர் போன டிடிஎஃப் வாசன் திருப்பதிக்கு சென்று இருக்கின்றார்..

அங்கு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் பிராங்க் வீடியோ செய்து இருக்கின்றார். அதாவது திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பது போல அவர் பிராங்க் செய்திருக்கின்றார். மேலும் இதனை திருப்பதி ஃபன்னி வீடியோ என்ற பெயரில் வெளியிட்டு இருக்கின்றார்.

இந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றது. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதற்கு பலரும் அவரை திட்டி வருகிறார்கள். இந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எச்சரித்து இருக்கின்றது. அது மட்டுமில்லாமல் எப்படி போனை அவர் உள்ளே எடுத்துச் சென்றார் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

google news