Connect with us

tech news

சாம்சங் போன் மூலம் கேலக்ஸி வாட்ச் அல்ட்ராவை சார்ஜ் செய்ய முடியாது – ஏன் தெரியுமா?

Published

on

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா, கேலக்ஸி வாட்ச் 7 உள்ளிட்ட சாதனங்களை சமீபத்தில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் கணிசமான அப்டேட்கள் மற்றும் புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும், புது வாட்ச்களில் அந்நிறுவனம் வழங்காத ஒரு அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா மற்றும் கேலக்ஸி வாட்ச் 7 மாடல்களில் வயர்லெஸ் பவர்ஷேர் வசதி வழங்கப்படவில்லை. இரு சாதனங்களில் இருந்தும் சாம்சங் சத்தமின்றி இந்த வசதியை நீக்கியுள்ளது. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் இந்த அம்சம் கொண்டு அதற்கான வசதியுள்ள ஸ்மார்ட்போன்களை வைத்து சாதனங்களை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.

முந்தைய கேலக்ஸி வாட்ச் மாடலில் சார்ஜ் ஏற்ற சாம்சங் போனினை பயன்படுத்த முடியும். சிக்கலான காலக்கட்டங்களில் இந்த அம்சம் பலருக்கும் பேருதவியாக இருந்து வந்தது. எனினும், புதிய சாதனங்களில் இந்த அம்சம் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புதிய சாதனங்களில் இந்த வசதி வழங்காததற்கு காரணம், முந்தைய மாடல்களை விட புது மாடல்களில் சென்சார் அதிக சீராக இயங்க செய்வதற்கு ஏற்ற வகையில் புதிய சென்சார் டிசைன் வழங்கப்பட்டு இருப்பது தான் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய கேலக்ஸி வாட்ச் மாடல்களில் பயோஆக்டிவ் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த சென்சார் பயனர் உடல்நலன் சார்ந்த விவரங்களை மிகத்துல்லியமாக வழங்குகிறது.

இத்தகைய பலன் அளிக்கும் சென்சார் பொருத்தும் போது, சாம்சங் வாட்ச் மாடல்களின் பின்புறம் உள்ள பேக் கிளாஸ் வடிவத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வயர்லெஸ் சார்ஜிங் காயில் இடமாற்றம் செய்யப்பட வேண்டியதாயிற்று. இதன் காரணமாக வயர்லெஸ் பவர்ஷேரிங் வசதி வழங்கப்படவில்லை.

google news