latest news
காமராஜர் பிறந்தநாள்… இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும்… தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…!
இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு க ஸ்டாலின் தொடர்ந்து மத்திய உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 3995 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2.20 லட்சம் மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.