india
ஒரே நாளில் 11 லட்சம்… ‘அசாம்’ சாதனையை பீட் பண்ணி… கின்னஸ் சாதனை படைத்த மத்திய பிரதேசம்…!
மத்தியபிரதேசம் இந்தூரில் ஒரே நாளில் 11 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளனர். கின்னஸ் புத்தகத்தில் இருந்து கொடுக்கப்பட்ட சான்றிதழை மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ் பெற்றுக்கொண்டார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருந்ததாவது: “தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் இந்தூரின் சகோதர சகோதரிகள் படைத்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
इंदौर अब विश्व में नंबर 1
मेरे इंदौर के भाई-बहनों स्वच्छता के बाद पौधरोपण में इतिहास रचने की आप सभी को अनंत बधाई और शुभकामनाएं। आप सभी की सहभागिता से एक दिन में 11 लाख से अधिक पौधरोपण का विश्व रिकॉर्ड हमारे देश के स्वच्छतम शहर, मध्यप्रदेश की आर्धिक राजधानी इंदौर ने अपने नाम कर… pic.twitter.com/y0vmdq1c5S
— Dr Mohan Yadav (@DrMohanYadav51) July 14, 2024
இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கு அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்திருக்கின்றது” என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு முன்னதாக ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை முறியடித்து தற்போது இந்தூர் புதிய சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.