Connect with us

india

உணவு பிரியர்களே…! உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்… இனி இதோட கட்டணமும் உயரப்போதா…?

Published

on

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களாக இருக்கும் ஸ்விக்கி zomato போன்ற நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.அதாவது தங்களது பிளாட்பாரம் கட்டணத்தை 20% உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.

இந்த கட்டண உயர்வு முதற்கட்டமாக டெல்லி மற்றும் பெங்களூரில் நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரம் கட்டணம் என்றால் டெலிவரி கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணங்களில் இருந்து வேறுபட்டது. ஆன்லைன் பிளாட்பார்மில் இந்த டெலிவரி சர்வீஸ் பெறுவதால் அதற்கு தனி கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது.

டெலிவரி ,ஜிஎஸ்டி போல் அல்லாது இந்த லாபம் நேரடியாக அந்த நிறுவனத்திற்கு சென்று சேரும். இதற்கு முன்பு குறைந்த பட்சம் ரூபாய் 5-ஆக இருந்த கட்டணம் தற்போது 6 ரூபாயில் இருந்து 7 ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு 1.25 முதல் 1.5 கோடி வரை அந்த நிறுவனங்கள் லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news