Connect with us

tech news

மலிவு விலை போக்கோ போன் வெளியீடு – என்ன ஸ்பெஷல்?

Published

on

போக்கோ நிறுவனம் ஏர்டெல் உடன் இணைந்து முற்றிலும் புதிய போக்கோ C61 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறது. போக்கோ C51 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடலாக போக்கோ C61 கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் ஏர்டெல் Exclusive வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை போக்கோ C61 மாடலில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் 3 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் G36 பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் 4GB ரேம், 64GB மெமரி வழங்கப்பட்டு உள்ளது. மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

புகைப்படங்களை எடுக்க போக்கோ C61 மாடல் 8MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 5MP செல்பி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த MIUI கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் ஓஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி பேட்ச் வழங்குவதாக போக்கோ தெரிவித்துள்ளது.

இந்திய சந்தையில் போக்கோ C61 ஏர்டெல் Exclusive வேரியண்ட் ஜூலை 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 5,999 ஆகும்.

வழக்கமான ஸ்மார்ட்போன் போன்று இல்லாமல், புதிய போக்கோ C61 ஏர்டெல் Exclusive வெர்ஷன் உடன் ஏர்டெல் பிரீபெயிட் கனெக்ஷன் வழங்கப்படும். இத்துடன் 50GB இலவச டேட்டா மற்றும் போக்கோ C61 மீது ரூ. 750 தள்ளுபடி பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் எதிரியெல் புளூ, டைமண்ட் டஸ்ட் பிளாக் மற்றும் மிஸ்டிக்கல் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

google news