india
228 கிலோ தங்கத்தை காணோம்… கேதார்நாத் கோயிலில் மோசடி… சங்கராச்சாரியார் குற்றச்சாட்டு…!
கேதர்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணவில்லை என்று சங்கராச்சாரியார் குற்றச்சாட்டு இருக்கின்றார். கேதர்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணாமல் போய்விட்டது. இதனை விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும் என்று ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி குற்றசாட்டி இருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்திருந்ததாவது “சிவபுராணத்தில் 12 ஜோதிலிங்க தலங்கள் குறித்த விவரங்கள் இருக்கின்றது. அதில் இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குறிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன. இமயமலையில் கேதார்நாத் கோயில் இருக்கும்போது டெல்லியில் எப்படி கேதார்நாத் கோவிலை கட்ட முடியும். இதற்கு பின்னர் அரசியல் காரணங்கள் இருக்கின்றது.
அரசியல்வாதிகள் நமது வழிபாடு தளங்களில் நுழைய முயற்சி செய்கிறார்கள். கேதார்நாத் கோவில் கருவறை சுவர்களில் தங்கத்தால் ஆன தகடுகள் பொருத்தப்பட்டிருந்தது. 228 கிலோ தங்க தகடு காணாமல் போயுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.
இப்போது டெல்லியில் ஒரு கேதார்நாத் கோவில் கட்ட திட்டம் போட்டு வருகிறார்கள். இன்னொரு மோசடி நடக்காமல் தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை வலியுறுத்தி இருக்கின்றார் சங்கராச்சாரியார்.