Connect with us

india

அக்டோபர் மாத தரிசன டிக்கெட்… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் வெளியிடும் தேதிகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருக்கின்றது.

உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். எப்போதும் இங்கு ஏழுமலையானை பார்க்க மக்களின் கூட்டம் நிரம்பி வழியும். அதிலும் அக்டோபர் மாதங்களில் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் அக்டோபர் மாத தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியில் தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கின்றது.

அதன்படி வருகிற ஜூலை 18ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், பிரம்மோற்சவம், சக்ரதீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெடுகள் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.

அக்டோபர் மாதம் அங்கப்பிரதோஷணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூபாய் 10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறப்படும். விஐபி தரிசன டிக்கெட் 23ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *