latest news
உங்க முடிவு எல்லாம் ஏத்துக்க முடியாது… காவிரி விவகாரம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு…!
சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடகா அரசு எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தலின் பெயரில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகா அரசு அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் அனைத்து தமிழக சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
அதன்படி காவிரி நீரை பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதல் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் எஸ் பி வேலுமணி, ஒ எஸ் மணியன் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் செல்வபெறுந்தொகை , பாஜக சார்பில் கரு நாகராஜன், பாமக சார்பில் ஜிகே மணி உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவது குறித்து பேசி இருந்தார்கள்.
இந்த கூட்டத்தில் கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விடாததால் விவசாயிகள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசின் முடிவை ஏற்க முடியாது. பருவ மழை சாதகமாக இருக்கும் சூழலில் கர்நாடகா அரசின் இந்த செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது ” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.