Connect with us

Cricket

இலங்கை U19 அணி முன்னாள் கேப்டன் சுட்டுக் கொலை

Published

on

இலங்கை U19 கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிகா நிரோஷனா அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கையின் அம்பலங்கோடாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தமிகா வசித்து வந்துள்ளார். இலங்கை முன்னாள் வீரர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிகாவை சுட்டுக் கொன்றவர்கள் 12-போர் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர் என்று முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. கொலை பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தமிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான இதர விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து தலைசிறந்த பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக வலம்வந்தவர் தமிகா நிரோஷனா. இளம் வயது கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய தமிகா நிரோஷனா ஃபர்வேஸ் மஹரூஃப், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா போன்ற வீரர்களை வழிநடத்தியுள்ளார். எனினும், தனது 20 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து தமிகா விலகிவிட்டார்.

2001 முதல் 2004 வரையிலான காலக்கட்டங்களில் 12 முதல்தர போட்டிகள் மற்றும் எட்டு லிஸ்ட் ஏ போட்டிகளில் தமிகா நிரோஷனா விளையாடி உள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் பட்டையை கிளப்பும் வீரராக செயல்பட்டவர் தமிகா. தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடிய காலக்கட்டத்தில் இவர் 300-க்கும் அதிக ரன்கள் மற்றும் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

2000 ஆம் ஆண்டு இவர் இலங்கை U19 அணியில் இடம்பிடித்தார். இதில் இரண்டு ஆண்டுகள் வரை அவர் இலங்கை அணிக்காக பல்வேறு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

google news