Connect with us

india

ரீல்ஸ் மோகத்தால் காவு வாங்கப்பட்ட உயிர்.. டிராவல் இன்ஃப்ளூயன்சருக்கு நேர்ந்த சோகம்..

Published

on

சமீபகாலமாகவே இளைய சமுதாயத்தினர் பலரும் சமூக வலைத்தளங்களில் முழ்கி விடுகின்றனர். ரீல்ஸ், வீடியோ, விலாக் என வாழ்க்கையை மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். இது ஒரு டைம்பாஸ் தானே என நினைத்தால் அது உயிரை காவு வாங்கும் நிலைக்கே சென்றுள்ளது.

மும்பையை சேர்ந்த சிஏ படித்தவர் அன்வி காம்தர். இவருக்கு டிராவல் என்றால் ரொம்பவே பிடிக்குமாம். அடிக்கடி வெளியில் நண்பர்களுடன் ட்ரிப் அடிப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். இன்ஸ்டா வளர்ச்சிக்கு பின்னர் அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய கணக்கில் போட்டு வந்தார். டிராவல் டிப்ஸும் வழங்கினார்.

இதனால் அன்வி கிடுகிடுவென வளர்ந்து தற்போது இரண்டரை லட்சம் ஃபாலோயர்களை வைத்து இருக்கிறார். இதனால் இன்னும் அதிகமான பயணங்களை செய்தார் அன்வி. ஆடிட்டராக வேலை செய்யும் அன்வி தன்னுடைய ஆடிட்டர் நண்பர்களுடன் மழைக்கால பயணமாக மங்கான் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வீடியோக்கள், போட்டோ எடுத்துவிட்டு அன்வி ரீல்ஸ் எடுத்துக்கொண்டு இருந்து இருக்கிறார்.

அப்போது தவறுதலாக 300 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விடுகிறார். நண்பர்களும் பதறி அடித்து உள்ளூர் காவல்துறைக்கு அழைக்க அவர்கள் மீட்பு குழுவுடன் அங்கு வருகின்றனர். அவர்கள் உதவியுடன் 6 மணி நேரத்துக்கு பின்னர் அன்வி கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனை தூக்கி செல்லப்பட்டார்.

ஆனால் பரிதாபமாக அன்வி மருத்துவமனை சென்ற வழியிலேயே உயிரிழந்தார். ரீல்ஸால் அன்வி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும் இன்ஸ்டாவே உயிரினை பறித்துவிட்டதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.

google news