Cricket
ஒன் மேன் ஷோ காட்டிய விராட் கோலி…தலைவன் பேரு தான் பிராண்ட்…
விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்கான முக்கிய அம்சமான ஒன்றாக இருந்து வந்தது துவக்கத்தில். உடலை புத்துணர்வோடு வைத்துக் கொள்வதறகாகத்தாக விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் உலகம் முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது. உடலில் வியர்வை வெளியேற்றம் என்பது மருத்துவ ரீதியாக மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இப்படி விளையாட்டுகளின் மீது ஆர்வம் காட்டி அதில் தங்களை அதிகமாக ஈடுபடுத்தி வருபவர்கள் அதிகமாக நோய்களால் பாதிப்பிற்கு உள்ளாக மாட்டார்கள் என்பது உலக அறிந்த உண்மையாகவும், நம்பப்படும் விஷயமாகவும் இருந்து வருகிறது. காலம் செல்லச் செல்ல விளையாட்டு போட்டிகள் என்பது உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியது.
உள் நாடுகளுக்குள்ளேயே நடத்தப்பட்டு வந்த இந்த போட்டிகள் நாடுகளுக்கு இடையேயான பெருமை பெற்றுத் தரக் கூடிய நிகழ்வாக மாறி விட்டது.
உலகம் முழுவதும் விளையாட்டு என்பது எப்படி முக்கியத்துவம் பெற்று வந்ததோ அதே போல அதில் ஈடுபடும் வீரர்கள் பிரபலமடைய துவங்கினர். அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாக்கும் அளவிற்கு அவர்களது புகழ் பரவத்துவங்கியது.
இப்படி உலகம் முழுவதுமுள்ள பல்வேறு விளையாட்டு வகைகளில் தனிப்பட்ட வீரர்கள் தங்களது திறமைகளால் முத்திரை பதித்து வரலாற்றில் இடம் பிடித்து மரணத்திற்கு பின்னரும் தங்களது பெயர் மண்னை விட்டு நீங்காத வண்ணம் வாழ்ந்து விடுகிறார்கள்.
ஈஎஸ்பிஎன் நிறுவனம் உலகம் முழுவதுமுள்ள தலை சிறந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிற்கான விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்து அவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் கிரிக்கெட் விளையாட்டு பிரிவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் வீரருமான விராட் கோலியின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவிற்கு கிடைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது