Connect with us

Cricket

அவரை டோனியோடு ஒப்பிடுவீங்களா? பாக். செய்தியாளரை பொளந்த ஹர்பஜன் சிங்

Published

on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனியை பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுடன் ஒப்பிட்ட பாகிஸ்தான் செய்தியாளருக்கு முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் சூப்பர் லீக், இலங்கை சூப்பர் லீக் 2024, டி20 குளோபல் லீக் போன்ற தொடர்களில் பணியாற்றி இருப்பதாக கூறிக் கொள்பவர் பரித் கான்.

இவர் தனது எக்ஸ் தள பதிவு ஒன்றில், “எம்.எஸ். டோனியா அல்லது முகமது ரிஸ்வானா? யார் சிறந்தவர்? உண்மையை கூறுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங், இப்போலாம், எதை புகைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். எம்.எஸ். டோனி இன்றும் உலக கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரர். ஸ்டம்ப்களின் பின்னால் அவரை விட சிறந்தவர் இப்போதும் யாரும் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதுபற்றிய பதிவில், “இப்போ எதை புகைக்கின்றீர்கள்? கேட்பதற்கே முட்டாள்தனமான கேள்வி இது. சகோதரர்களே அவருக்கு சொல்லுங்கள். ரிஸ்வானை விட பலமடங்கு சிறந்தவர் எம்.எஸ். டோனி. ரிஸ்வானை கேட்டால்கூட அவரும், இதற்கு உண்மையாக பதில் அளிப்பார். எனக்கு ரிஸ்வான பிடிக்கும், அவர் நல்ல வீரர். எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாடுவார்.”

“ஆனால் இந்த ஒப்பீடு மிகவும் தவறான ஒன்று. சர்வதேச கிரிக்கெட்டில் இன்றும் டோனி நம்பர் 1 வீரர். ஸ்டம்ப்களின் பின்னால் அவரைவிட சிறந்தவர் யாரும் இல்லை,” என குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் எம்.எஸ். டோனி 256 கேட்ச்களையும், 38 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடிய 350 போட்டிகளில் 321 கேட்ச்களையும், 123 ஸ்டம்பிங்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட் பேட்டிங்கில் எம்.எஸ். டோனி 4876 ரன்களை குவித்துள்ளார். இதில் ஆறு சதங்கள், 33 அரைசதங்கள் அடங்கும்.

முகமது ரிஸ்வான் 30 டெஸ்ட் போட்டிகளில் 78 கேட்ச்களையும், மூன்று முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஸ்வான் 76 கேட்ச்கள் மற்றும் மூன்று ஸ்டம்பிங்களை செய்துள்ளார். டெஸ்ட் பேட்டிங்கை பொருத்தவரை ரிஸ்வான் 1616 ரன்களை சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், ஒன்பது அரைசதங்களும் அடங்கும்.

google news