latest news
வாழ்த்துக்கள் மோடி… எலான் மஸ்கே இறங்கி ட்வீட் போட இதான் காரணமா?
எக்ஸ் தளத்தின் சிஇஓ எலான் மஸ்க் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டி இருக்கிறது. உலக தலைவர்கள் வரிசையில் மோடி முக்கிய இடத்தில் இருக்கிறார். இதற்காக அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அதை தொடர்ந்து எலான் மஸ்கும் தன்னுடைய வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த மூன்று வருடங்களில் மோடியை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 3 கோடி வரை அதிகரித்து இருக்கிறது. மற்ற உலக தலைவர்களை கணக்கிடும்போது இது பெரிய அளவிலான எண்ணிக்கை என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனை எக்ஸ் தளத்தில் 38 மில்லியன் பாலோ செய்கின்றனர்.
போப் பிரான்சிஸை 18 மில்லியன் பேரும், துருக்கி அதிபா் எா்டோகனை 21 மில்லியன் பேரும், துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமதை 10 மில்லியன் பேரும் பாலோ செய்கின்றனர். இவர்களை கணக்கிடும் போது மோடியின் எண்ணிக்கை மிக அதிகம். மோடி தற்போது 100 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலே இருக்கிறார்.
முதல் இடத்தில் 138 மில்லியன் ஃபாலோயர்களுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஓபாமா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் மோடியின் எண்ணிக்கையை நெருங்கவே இல்லை. 2009ம் ஆண்டு எக்ஸில் இணைந்தார் மோடி. இன்ஸ்டாவில் 91 மில்லியன் பாலோயர்களையும், யூட்யூபில் 25 மில்லியன் பாலோயர்களையும் வைத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.