latest news
உங்க ஊரும் இன்னும் ஒரு வாரத்துக்கு ஊட்டி தானா?…வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்…
தமிழகத்தின் வானிலையில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் வருகிறது. மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்பத்தூரில் மிக கனமழை பெய்தது.
அதிலும் நீலகிரியில் அடித்து பெய்தது பேய் மழை. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்தது. சென்னையை பொருத்த வரை பெரிதாக மழை பெய்யவிட்டாலும் வானம் பல நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வெப்பம் தணிந்து குளுமை நிலவியது.
மாநிலத்தின் பல இடங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வந்த நிலை இருந்து வருகிறது. மேற்கு திசை காற்றின் காரணமாக இந்த மாற்றம் தமிழகத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
இன்று துவங்கி ஜூலை 23ம் தேதி வரை வடக்கு மத்திய வங்கக்கடலில், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடலின் பகுதிகளுல் சூறாவளிக்காற்று மனிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையில் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரித்துள்ளது.
இதே போல் வருகிற 26ம் தேதி வரி தமிழகத்தில் ஓரு சில இடங்கள் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரை அடுத்த 24மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை மாநகரத்தின் இரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.