Cricket
ராகுல் ரிட்டர்ன்ஸ்?…படுபயங்கரமாக மாறப்போகுதா பெங்களூரு!…
கிரிக்கெட் போட்டியை பொறுத்த வரை இந்தியாவில் என்றைக்கும் குறையாத மோகம் இருந்து கொண்டே தான் இருந்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி எந்த அணியுடன் மோதினாலும் தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு போட்டியை பார்க்க நேரம் ஒதுக்கி விளையாட்டை கண்டு மகிழும் பெரும் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
இந்திய அணி எதிர்த்து விளையாடுவது ஜாம்பவான் அணியாக இருந்தாலும் சரி, கத்துக் குட்டி அணியாக இருந்தாலும் சரி அந்த போட்டியை காண கூட்டம் குவியும்.
அதே போன்ற ஆர்வமும், ஈடுபாடும் தான் உள்ளூர் போட்டியான ஐபில் தொடரின் மீதும் இருந்து வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்து விட்டாலே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுவிடும்.
ஒவ்வொரு அணியை ஆதரித்து அவர்களை உற்சாகபடுத்த எந்த மாநில மைதானத்தில் போட்டி நடைபெற்றாலும் அங்கே சென்று போட்டியயை ரசித்து பார்ப்பது பலரின் பழக்கம் தான். எப்படி அணிகளின் மீது மோகம் இருக்கின்றதோ, அதே போல தனிப்பட்ட வீரர்களின் மீதான அபிமானமும் தான்.
இந்திய நட்சத்திர வீரர்கள் பலரும் இந்த தொடரில் விளையாடி வருகின்றனர். இதனால் தான் போட்டி சுவாரஸியமாக மாறி விடுகிறது. கடந்த 2013, 2016 ஐபில் சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அதிரடி வீரர் கே.எல்.ராகுல் மீண்டும் அதே அணிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வரும் ராகுல், பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகவும் இந்த தகவல் சொல்லியுள்ளது. சவுத் ஆப்பிரிக்கா அணியின் ஃபாஃப் டூப்ளிசிஸ் தான் பெங்களூரு அணியின் இப்போதைய கேப்டனாக இருந்து வருகிறார்.