tech news
வாவ் சொல்ல வைக்கும் அம்சங்கள்.. புது Tab அறிமுகப்படுத்திய லெனோவோ
லெனோவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. லெனோவோ லீஜியன் டேப் என அழைக்கப்படும் புது டேப் மாடலில் 8.8 இன்ச் 2.5K 144Hz PureSight Gaming டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேப்லெட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 பிராசஸர், 12GB ரேம் கொண்டிருக்கிறது.
போட்டோ எடுப்பதற்கு 13MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா உள்ளது. இந்த டேப்லெட் அதிக சூடாவதை தடுக்கும் வகையில், இதில் வேப்பர் தெர்மல் சொல்யூஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை பயனர்கள் மூன்று மோட்களில் இயக்கும் வசதி உள்ளது. இத்துடன் கூடுதல் டிஸ்ப்ளேவை இணைத்துக் கொள்ள ஏதுவாக டிஸ்ப்ளே போர்ட் 1.4 உள்ளது.
இந்த டேப் ப்ளூடூத் 5.3, வைபை வசதிகளை கொண்டுள்ளது. இத்துடன் 6550mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதில் USB Type C போர்ட் உள்ளது. இத்துடன் குவால்காம் குயிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டேபில் 45W சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய லெனோவோ டேப் மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் புதிய லெனோவோ லீஜியன் டேப் மாடல் ஸ்டாம் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 34,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இந்த டேப்லெட்டை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் கோட் விற்பனையில் இதனை ரூ. 28,999 விலையில் வாங்கிட முடியும்.