india
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்…எந்த ஆதரமும் இல்லை…அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம்…
பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்நிலையில் நீட் தேர்வு குறித்த பல்வேறு கேள்விகளையும், குற்றச்சாட்டுக்களை எதிர்கட்சியான காங்கிரஸ் முன் வைத்தது. நீட் தேர்வு விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர். திராவிட முன்னேறறக் கழகத்தின் எம்.பி.யுமான கலாநிதி வீராசாமி ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
நீட் தேர்வு முறைகேடுகளால் இதுவரை இருபத்தி நாலு லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றனர். அதோடு இந்த முறைகேடுகளுக்கு மத்திய கல்வித்துறைஅமைச்சர் தர்மேந்திர பிரதான் தான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சாட்டினர். இதற்கு விளக்கமளித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த ஏழு ஆண்டுகளாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் எழுபது முறை நீட் தேர்விற்கான வினாத்தாள் கசிந்ததாக சொல்லப்பட்டு வருகிறது. இதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுவரை இல்லை என்றார். நீட் தேர்வினை கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக ஐந்து கோடி பேர் எழுதியுள்ளதாக கூறினார்.
மொத்தமுள்ள நாலாயிரத்து எழனூறு தேர்வு மையங்களில் பாட்னாவின் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் வினாத்தாள் கசிந்துள்ளது என்றார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணை நடந்து வருகிறது என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் அவையில் பேசும் போது கூறினார்.