Connect with us

Cricket

ருதுராஜ் அணியில் இல்லாமல் போனதற்கு காரணம் இதுதான்..அஜித் அகர்கர் பதில்..

Published

on

இந்திய அணியில் ருதுராஜ் இல்லாமல் போனதற்கு பெரிய விமர்சனம் எழுந்த நிலையில் பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு அதிகாரி அஜித் அகர்கர் பதில் கூறி இருப்பது வைரலாகி இருக்கிறது.

இந்திய அணி இலங்கைக்கு சென்று 3 டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கிறது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இணைந்த பின்னர் இந்தியா விளையாட இருக்கும் முதல் தொடர் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இத்தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்ட நிலையில் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ருதுராஜுக்கு ஆதரவாக முன்னணி வீரர்களே கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைமை தேர்வுக்குழு அதிகாரி அஜித் அகர்கர் கூறுகையில், இலங்கை தொடரில் விளையாடாத வீரர்கள் ஏமாற்றமடைவார்கள் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் எங்களால் ஒரு தொடருக்கு 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

உதாரணத்துக்கு, உலகக் கோப்பைக்கு முந்தைய போட்டிகளில் ரிக்கு சிங் அதிக அளவில் உடற்தகுதியுடன் இருந்தார். ஆனாலும் அவர் உலகக்கோப்பை டீமில் இடம்பெறவில்லை. இதுப்போலவே ருதுராஜ், அபிஷேக் சர்மா தவிர்க்கப்பட்டதும், மற்ற எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

google news