latest news
மதுரை சிறுவன் கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்பட்ட ஐஏஎஸ் மனைவி சூர்யா தற்கொலையின் பின்னணி…
மதுரை சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்டு வந்த ஐஏஎஸ் மனைவி சூர்யா தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதுகுறித்த மேலும் பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மதுரையில் 14 வயது சிறுவன் ஆட்டோ ஓட்டுநருடன் கடத்தப்பட்டு 2 கோடி கேட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாய் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்களே சிறுவனை சாலையில் விட்டுவிட்டு தப்பி சென்றனர். இந்த விவகாரத்தில் குஜராத்தில் பணிபுரிந்துவரும் மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளராக இருக்கும் ரஞ்சித்குமாரின் மனைவி சூர்யாவும் சிக்கி இருக்கிறார்.
கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்னை இருப்பதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இரண்டு மகன்களை பிரிந்து சூர்யா சொந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு ஐகோர்ட் மகாராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்தே இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
தாயின் தைரியத்தால் மகன் மீட்கப்பட்ட நிலையில் ஐகோர்ட் மகாராஜா தான் பின்னணியில் இருக்கிறார் என்பதை காவல்துறை கண்டுபிடித்தது. இதனால் சூர்யாவின் பெயர் இதில் இணைக்கப்பட்டது. இதை தொடர்ந்தே சூர்யா கணவரை தேடி குஜராத் சென்று இருக்கிரார். ஆனால் மனைவியுடன் விவகாரத்து விஷயமாக ரஞ்சித்குமார் வெளியில் இருந்ததால் அவரை வீட்டுக்குள் விட அனுமதிக்கவில்லை.
அதை தொடர்ந்தே தன்னிடம் இருந்த விஷத்தினை குடித்துவிட்டாராம். அவரை காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தாலும் காப்பாற்ற முடியாமல் போனது. சூர்யாவிடம் இருந்து அவர் இறப்பு குறித்து எழுதி வைத்த கடிதம் மீட்கப்பட்டு இருப்படதாகவும் இன்னும் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அது செய்தால் இறப்புக்கான காரணம் தெரியும் எனக் கூறப்படுகிறது.