Connect with us

latest news

மின்சார ரயிலில் பயணம் செய்யும் ஆளா நீங்க… அப்போ மறக்காம இதை நோட் பண்ணுங்க…

Published

on

சென்னையின் முக்கியமான 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.

ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகளுக்காக 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில்களில் காலை 9.30, 9.56, 10.56, 11.40, நண்பகல் 12.20, 12.40 மற்றும் இரவு 10.40 ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயிலில் 9.40, 9.48,  10.04, 10.12, 10.24, 10.30, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, நண்பகல் 12.00, 12.10, 12.30,  12.50 மற்றும் இரவு 11.05  11.30,  11.59 ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் கூடுவாஞ்சேரியில் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 மணி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் ரயில்களில் 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40, நண்பகல் 12.05, 12.35, மதியம் 1.00, 1.30 மற்றும் இரவு 11.40 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – கும்மிடிபூண்டி காலை 10 மணி ரயிலும்,  காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை காலை 9.30 மணி ரயிலும், திருமால்பூர்- சென்னை கடற்கரை காலை 11.05 ரயிலும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை காலை 11.00, 11.30, நண்பகல் 12 மற்றும் இரவு 11 மணி ரயிலும், கூடுவாஞ்சேரி – சென்னை கடற்கரை 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகாலை முதல் காலை 9.20 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரையும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களுக்கான சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் தகவலுக்கு https://sr.indianrailways.gov.in/ தளத்தில் பார்த்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: எனக்கும், விராட் கோலிக்கும் இருக்கும் பிரச்னை… ஓபனாக போட்டுடைத்த கவுதம் கம்பீர்…

google news