Connect with us

india

7வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்… ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் மக்கள்…

Published

on

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய 7வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இதனால் எந்த பொருட்களின் விலை அதிகரிக்கும், குறையும் என நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து ஒப்புதல் வாங்கினார். அதன் பின்னர் மோடி தலைமையில் நாடாளுமன்ற அவையில் மத்திய அமைச்சர்களின் கூட்டம் நடந்தது. இதையடுத்து பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

விவசாயிகளின் வாழ்வாதாரங்களை உயர்த்த எதுவும் சலுகைகள் அறிவிக்கப்படுமா என இந்த வருடமும் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அது உயர்த்தப்படும் பட்சத்தில்  ஆண்டுக்கு 8.5 லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவோர் வரி செலுத்த தேவையே இல்லை.

மருத்துவ காப்பீடு, ஓய்வுதிய திட்டம் என பல துறைகளில் அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. பாஜக தனிப்பெருபான்மையுடன் ஆட்சி அமைக்காமல் இருப்பதால் மக்களை கவரும்படியே இந்த பட்ஜெட் தாக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news