Cricket
பாகிஸ்தான் செல்கிறதா இந்தியா? வேற வழியே இல்லை… கைவிரித்த ஐசிசி… என்ன நடக்கும் தெரியுமா?
சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ கூறப்பட்டது. இந்நிலையில் நடந்த சந்திப்பில் ஐசிசி அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்திய அணி 2008 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை தவிர்த்து வருகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் லாகூரில் நடக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
இதை அடுத்து இத்தொடரில் பங்கெடுக்க இந்திய அணி பாகிஸ்தான் வர முடியாது. அதற்கு பதில், இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்த வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்தது. ஆனால் இதற்கு மற்ற நாடுகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் பெரிய அளவில் நிதி சிக்கல் இருக்கிறது. இந்திய அணியுடன் விளையாட சில நாடுகள் விமானத்தில் பயணம் செய்யும் நிலை உருவாகும். அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் தொடரை நடத்தும் போது வெளியில் சில போட்டிகள் வைப்பதும் அந்த நாடு விரும்பவில்லை.
அதே சமயத்தில் இந்தியா இல்லாமல் இந்த சாம்பியன் டிராபி தொடரை நடத்தினால் அதுவும் தோல்வியில் முடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் தான் கொழும்புவில் ஐசிசி தலைமையில் இத்தொடருக்கான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. போட்டியை நடத்த பாகிஸ்தான் தரப்பிலிருந்து 384கோடி ரூபாய் நிதி வேண்டும் என பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஐசிசியும் இத்தொகை காண ஒப்புதல் கொடுத்து விட்ட நிலையில், ஹைபிரிட் முறையில் இந்திய போட்டிகள் குறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தான் செல்ல வேண்டும்.
இத்தொடரினை இந்திய அணி புறக்கணித்தால் அதற்கு பதிலாக மேற்கிந்திய தீவுகள் அல்லது இலங்கை உள்ளே வரும். கவுதம் கம்பீர் இணைந்த பிறகு பெரிய தொடர் என்பதாலும் இந்தியா பாகிஸ்தான் செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.