Connect with us

tech news

நிஜமாகும் எந்திரன்: “சிட்டி ரோபோ”-வை பணியமர்த்தும் எலான் மஸ்க்

Published

on

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் டெஸ்லா. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். பல்துறை ஜாம்பவானாக பார்க்கப்படும் எலான் மஸ்க் எப்போதும் தான் எடுக்கும் முடிவுகளால் அதிகம் விமர்சிக்கவும், பாராட்டையும் பெறுவார்.

அந்த வரிசையில், டெஸ்லா நிறுவன உற்பத்தி மையங்களில் அடுத்த ஆண்டு துவங்கி ஹியுமனாய்டு ரோபோக்களை பணியில் அமர்த்த எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் டெஸ்லாவின் ஹியூமனாய்டு ரோபோட் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாகவே எலான் மஸ்க் இவ்வாறு அறிவித்துள்ளார்.

முதற்கட்டமாக டெஸ்லா உற்பத்தி மையங்களில் பணியமர்த்தப்பட இருக்கும் ஹியூமனாய்டு ரோபோக்கள் 2026 ஆண்டு துவங்கி உலகின் பல்வேறு நிறுவனங்களிலும் பணியமர்த்தப்படலாம் என்று எலான மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனம் உருவாக்கி இருக்கும் ஹியூமனாய்டு ரோபோட் ஆப்டிமஸ் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ரோபோ உற்பத்தி ஆலையில் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டிருக்கும். இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டு, 2025 இறுதியில் ஆப்டிமஸ் ரோபோக்கள் விற்பனைக்கு வரும் என்று எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்து இருந்தார்.

ஜப்பானின் ஹோண்டா மற்றும் தென் கொரிய நிறுவனமான ஹூண்டாயின் போஸ்டன் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஹியூமனாய்டு ரோபோக்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகை ரோபோக்களை கொண்டு வேலையாட்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்து கொள்ள இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த ரோபோக்கள் தளவாடங்கள், குடோன் மற்றும் உற்பத்தி ஆலைகளில் பணியமர்த்தப்பட உள்ளன.

google news