latest news
இனி சிக்ஸர் அடித்தால் அவுட்டாம்…புதிய விதியை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து… அடேய்!
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் சிக்ஸர்களுக்காகவே அதை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம். ஆனால் தற்போது இங்கிலாந்து நாட்டில் சிக்ஸர் அடித்தால் அவுட் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் 234 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளூர் கிளப் தான் சௌத்விக் அண்ட் ஷோர்ஹாம். இங்கு ஏராளமான வீரர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுப்பது வழக்கம். ஆனால் அவர்கள் விளையாட்டின் போது அடிக்கும் சிக்ஸர்கள் அருகில் இருக்கும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்து விடுகிறது.
இதனால் அந்த கிளப்பில் அடிக்கடி அங்கிருப்பவர்கள் புகார் தெரிவித்த பிரச்சினை செய்வது வழக்கமாகி இருக்கிறது. இதை தடுக்க என்ன செய்யலாம் என கிளப் நிர்வாகம் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு உதித்த சிந்தனை தான் இது.. அதாவது சிக்ஸ் அடித்தால் தானே இந்த பிரச்சினை அடிக்காமலே இருந்தால் என்ன நடக்கும்.
இதை செயல்முறை படுத்தவே இனி இங்கு விளையாடும் பேட்ஸ்மேன்கள் முதல் சிக்ஸ் அடித்தால் ரன் எதுவுமில்லை என்றும், இரண்டாவது சிக்சை அடித்தால் அவர்கள் அவுட் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். இது அங்கிருக்கும் வீரர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் போர் மற்றும் சிக்ஸர்கள் அடிப்பது தான் பெரிய சுவாரசியத்தை கொடுக்கும். தற்போது சிக்ஸ் அடித்தால் அவுட் என்ற விதியால் கிரிக்கெட்டின் உயிரோட்டத்தையே அது பாதிக்கும் என அங்கிருப்பவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உள்ளூர் விளையாட்டை பார்க்க வரும் ரசிகர்களும் இந்த முடிவு ஏமாற்றம் அளிப்பதாக கூறி வருவதாக தகவல் தெரிவிக்கிறது.