tech news
டெட்பூல் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் போக்கோ
போக்கோ நிறுவனம் புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டு வந்தது. தற்போது போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ போக்கோ F6 டெட்பூல் எடிஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டெட்பூல் மற்றும் வால்வரைன் திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி, போக்கோ F6 ஸ்மார்ட்போனின் டெட்பூல் எடிஷன் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஜூலை 26 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இதே நாளில், இந்த திரைப்படமும் ரிலீசாக இருக்கிறது. ஹிமான்ஷூ வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அளவில் பெரிய மஞ்சள் நிற பெட்டியும், சிவப்பு நிற ஸ்மார்ட்போனும் இடம்பெற்றுள்ளன.
இத்துடன் டெட்பூல் மற்றும் வால்வரைன் படங்கள், டெட்பூல் எழுத்துக்கள் மற்றும் டெட்பூல் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. புது ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் ஸ்பெஷல் எடிஷன் மாடல் என்று அழைக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ F6 மாடலில் 6.67 இன்த் 1.5K AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர், கூலிங் சிஸ்டம், அதிகபட்சம் 12GB வரையிலான ரேம், IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓஎஸ், 50MP பிரைமரி கேமரா, 20MP செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 90W சார்ஜிங் வழங்கப்படுகிறது.