latest news
தங்கம் மட்டுமல்லிங்க தக்காளி விலையும் ஆட்டம் கண்டது… ஒரு கிலோ விலை என்ன தெரியுமா?
மத்திய பட்ஜெட்டின் தாக்கலுக்கு பிறகு தங்கம் விலை பெரிய அளவில் ஆட்டம் கண்டு வரும் நிலையில், காய்கறி விலையிலும் பெரிய மாற்றம் நிகழ்ந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சமீப காலமாக தக்காளியின் விலை 100 ரூபாயை நோக்கி சென்று கொண்டிருந்தது.
சமீபகாலமாக அண்டை மாநிலங்களில் பெய்து வந்த மழை காய்கறி வரத்தை பெரிய அளவில் பாதித்தது. இதைத் தொடர்ந்து தற்போது நிலைமை சரியாகி வரும் நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை குறைந்திருக்கிறது. கோயம்பேட்டிற்கு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து காய்கறி வரத்தும் அதிகரித்துள்ளது.
தொடர் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் காய்கறிகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அடிப்படை தேவையான தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு கூட உச்ச ரூபாயில் விற்றது. இதைத் தொடர்ந்து தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை 15 ரூபாய் குறைந்து கிலோவிற்கு 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதைப்போல், கிலோ 40 ரூபாய்க்கு விற்று வந்த வெங்காயம் பத்து ரூபாய் குறைந்து 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கேரட் விலை 20 ரூபாய் குறைந்து கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் இதன் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறதாக பேச்சுகள் அடிப்படுகிறது.