latest news
அரசு பள்ளி மாணவரா நீங்க? தமிழக அரசு உங்களுக்காக கொடுக்க இருக்கும் 401 கோடி ரூபாய்!…
அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வரும் நிலையில் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் இளங்கலை பட்டம் அல்லது தொழிற்கல்வி பயிலும் வரை கொடுக்க தமிழக அரசால் தமிழ் புதல்வன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 3.28 மாணவர்களுக்கு 401.47 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாணவர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் தகுதி பெற 6ம் வகுப்பு முதல் 12 வரை அரசு பள்ளியில் தான் பயின்று இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் பலன்பெற நினைக்கும் மாணவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் எண் வைத்திருக்க வேண்டும். அல்லது ஆதார் கார்டுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டியதும் அவசியம். மாணவர்களுக்கு இத்திட்டம் சரியாக சென்று சேர பள்ளி நிர்வாகமும் செயல்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.