Connect with us

latest news

திருப்புமுனை தரப்போகிறதா ஆதாரம்?…திசை மாறுமா செந்தில் பாலாஜி வழக்கு?…

Published

on

Court Senthi lbalaji

வேலை வாங்கித்தருவதாக கூறி சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை முதன்மை நீதி மன்றத்தில் நடந்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை நீதி மன்றம் ரத்து செய்தது. அமலாக்கத்துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட்டுருந்தார் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதோடு நெஞ்சு வலி இருப்பதாக சொன்னாதால் அவர் சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடார். உடல் நலக் கோளாறு காரணமாக வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியாது என செந்தில் பாலாஜி தரப்பு வைத்த கோரிக்கையை ஏற்றிருந்தது நீதி மன்றம்.

இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடியது செந்தில் பாலாஜி தரப்பு. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த ஜாமின் வழக்கின் மீதான விசாரணையை ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Pen Drive

Pen Drive

இதனிடையே செந்தில் பாலாஜி வழக்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை தெளிவு படுத்தக்கோரி அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள் ஆவணங்களில் புதிதாக பென்டிரைவ் எப்படி சேர்க்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்த கேள்வியால் செந்தில் பாலாஜி வழக்கு திசை மாற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது

 

google news