india
விதை போட வளைந்த வில்…துவக்கமே தூள் தான் போங்க…
சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பமே அசத்தலாக மாறியிருக்கிறது இந்திய அணிக்கு. உலகில் உள்ள நாடுகளில் இருனூருக்கும் மேற்பட்டவைகள் ஒரே நேரத்தில் சந்திக்கும் விளையாட்டு திருவிழா தான் ஒலிம்பிக்.குழுப் போட்டிகள், தனி நபர் திறனுக்கான சோதனை என பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக பார்க்கப்படுவது தான் இந்த ஒலிம்பிக் போட்டி தொடர்.
இந்திய அணி இதுவரை நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை அதிகமாக குவிக்காமல் தரவரிசையில் மிகவும் பின் தங்கியே இருந்து வருகிறது. 2020ம் ஆண்டு நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தான் அதிக பதக்கங்களை வென்றுள்ளது. எண்ணிக்கையாக பார்த்தால் அது வெறும் ஏழாகத்தெரியலாம், ஆனால் முன்னேற்றம் என்ற பார்வையில் பார்த்தால் அது வளர்ச்சி தான்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் பிராண்ஸ் தலை நகர் பாரீஸில் துவங்கியுள்ளது. போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று திறமையை காட்டி சாதனை படைக்க இந்திய வீரர்கள் தங்களை தயார் படுத்தியுள்ளனர். வில்வித்தை ரிகர்வ் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் துவங்கியது.
இதில் வெல்லும் வீரர், வீராங்கனைகள் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள். பெண்கள் குழு போட்டியில் இந்தியாவின் சாதனையாளர்களான அங்கிதா பகத், பஜன் கெளர் மற்றும் தீபிகா குமாரி ஆகியோர் அறனூற்றி அறுபது புள்ளிகளை எடுத்து தர வரிசையில் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.
ஆண்கள் பிரிவில் நடந்து முடிந்த போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய் மற்றும் பிரவின் ரமேஷ் ஜாதவ் ஆகியோர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். பதக்க வேட்டையில் இந்திய இறங்க இந்த வில்வித்தை போட்டிகள் விதை போட்டுள்ளது. வில்வித்தை பிரிவில் கால் இறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளது இந்திய வில்வித்தை அணி. துவக்கமே தூளாக மாறியுள்ள இந்த நேரத்தில் தடகளம் உட்பட இந்திய அணி பங்கேற்க உள்ள அனைத்து விதமான போட்டிகளிலும் வென்று வாகை சூடும் என்ற ஆவல் பிறந்துள்ளது.