Cricket
தோனியிடம் எப்பவும் அது இருக்கும் – மகேஷ் தீக்ஷனா
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் துவங்கும் முன் பேட்டியளித்த இலங்கை அணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா எம்.எஸ். தோனி பற்றி பேசியுள்ளார். இலங்கை அணியின் பந்துவீச்சாளரான மகேஷ் தீக்ஷனா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி உள்ளார்.
“நான் தோனியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக என்னை எதிர்த்து ஸ்வீப் ஷாட் ஆடும் பேட்டர்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் எனக்கு உதவியாக இருந்துள்ளார். எனது செய்கை மூலம், என்னால் அதிவேகமாக பந்துவீச முடியும்.”
“ஆனாலும், அவர்கள் அதை பவுண்டரிக்கு விரட்டிடுவர். அவர் என்னை ஃபுல் லென்த் அளவுக்கு வீச கோருவார். அப்படித் தான் நான் யார்க்கர் வீச ஆரம்பித்தேன். நாளடைவில் டெத் ஓவர்களில் பந்துவீச அதிக நம்பிக்கை கிடைத்தது. தோனியிடம் எப்போதும் திட்டம் இருக்கும். ஆனால் அவர் பந்துவீச்சாளர் திட்டத்தை முதலில் முன்னெடுப்பார். அதற்கு பலன் கிடைக்கவில்லை எனில், அவர் உங்களுக்கு உதவுவார்.”
“டி20 கிரிக்கெட்டில் டிபென்சிவ் பவுலிங் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஃபிளாட் விக்கெட்டில் 4 ஓவர்களில் 20-30 ரன்களை கொடுப்பது பிரச்சினை இல்லை. அணியில் 3-4 விக்கெட்டுகளை எடுக்க மற்ற பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள்,” என்று மகேஷ் தீக்ஷனா தெரிவித்தார்.