india
வரி மட்டும் வாங்குறீங்க… எங்களுக்கு செய்ய முடியாதா? மத்திய பட்ஜெட்டை எதிர்த்து திமுக ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு தற்போதைய ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தமிழ் என்ற பெயர் கூட இடம்பெறாமல் போனது. இது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் கடும் விமர்சனம் எழுந்த நிலையில் திமுக அரசு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதனை அடுத்து, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் அந்த மாவட்ட எம்பிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.
சென்னை ஆர்ப்பாட்டத்தில் பேசிய கலாநிதி மாறன் இனிமே வரி கட்டாமல் இருங்க. நம்ம பணமெல்லாம் ஒன்றிய அரசுக்கு தான் போகுதுன்னு நான் சொன்னா எப்படி இருக்கும்? ஒன்றிய நிதியமைச்சர் இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இருக்கலாமா? வரி வாங்கத் தெரியுது.. நிதி கொடுக்கத் தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தூத்துக்குடி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எம்பி கனிமொழி, நீ எனக்கு காசே கொடுக்க மாட்டேங்குறீங்க. நாங்க எதுக்கு உங்களுக்கு வரி கொடுக்கணும். இப்படி தமிழ்நாடு கேட்டா நீங்க எப்படி நாட்டை நடத்துவீங்க? ஏற்கனவே மாநில உரிமைகள் மற்றும் மாநில அதிகாரங்களை பறித்துக்கொண்டு இருந்தீர்கள். தற்போது மாநில வரிகளை பறித்து கொண்டு மாநிலங்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறார்கள். மாநிலத்தினை எப்படி நடத்த முடியும். மக்களுக்கு தேவையான சேவைகளை எப்படி செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.