Connect with us

india

மாதம் நான்கு நாட்கள்… புத்தகப் பை இல்லாத நாள்களாக முடிவெடுத்த கல்வித்துறை… ஜாலிதான்!

Published

on

பள்ளி மாணவர்களின் புத்தகப் பையின் சுமை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதை சரிப்படுத்தும் விதமாக புதிய நடவடிக்கை ஒன்றை கேரள மாநிலம் முன்னெடுக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து பேசிய கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, கேரள மாநிலத்தில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கேரளா அரசும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ச்சியாக இது குறித்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

பள்ளி மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க பாட புத்தகங்களை இரண்டு பகுதிகளாக அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டும் இன்னும் எடை குறைந்ததாக இல்லை. மேலும், முதலாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை 1.6 கிலோ முதல் 2.2 கிலோ வரைக்குள்ளும், பத்தாம் வகுப்பு மாணவர்களின் பையின் எடை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையில் மட்டுமே பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் இந்த சுமையை குறைக்க மாதம் நான்கு நாட்கள் புத்தகப் பை இல்லாத நாட்களாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான திட்டத்தினை விரைவில் அறிமுகப்படுத்தவும் முடிவெடுத்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்..

google news