latest news
இருசக்கர வண்டிகளின் எலெக்ட்ரிக் மானியம்… நீட்டிக்கப்பட்ட கடைசி நாள் எப்போ தெரியுமா?
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய மத்திய அரசு மானியம் வழங்கி வரும் நிலையில் ஜூலை 31ந் தேதியுடன் முடியும் இதன் கடைசி தேதி தற்போது நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க 3 லட்சத்து 72 ஆயிரத்து 215 வாகனங்கள் பயன்பெறும் வகையில் 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது.2019ம் ஆண்டு FAME (Faster Adoption and Manufacturing of Electric vehicles in India) திட்டத்தையும் அறிவித்தது.
இதில் விண்ணப்பிக்கும் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு மானியம் வழங்கப்படும். இதில் இரண்டு சக்கரம் பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆயிரமும், மூன்று சக்கர வாகனம் பயன்படுத்துபவர்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் நிதியும் வழங்கப்படுகிறது. இதன் கெடுக்காலம் ஜூலை 31 வரை இருந்தது.
இந்நிலையில் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக செப்டம்பர் 30ந் தேதியை அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. நிதி தீர்ந்துப்போகும் பட்சத்தில் இந்த திட்டம் முன்கூடியே நிறுத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் இரண்டு மாதங்கள் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் திட்ட மதிப்பும் 778 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.