india
ஊழல் மலிந்த அரசு…மோடியை புறக்கனிக்கும் மக்கள்…முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு…
புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி தலைமையிலான அரசு ஊழல் மலிந்த அரசு என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த வருமான நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியிருந்தார். பாண்டிச்சேரியிலும் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது.
அன்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் வெற்றி பெற்றிருந்த வைத்தியலிங்கமும், பாண்டிச்சேரி முன்னாள் முதலமைச்சருமான நாராயணசாமியும் சென்னையில் கமல்ஹாசனை சந்தித்தனர்.
திமுக கூட்டணியில் உள்ள இந்த மூவரும் சந்தித்து கொண்ட போது எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்றார் வைத்தியலிங்கம். முன்னதாக இன்று காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார் வைத்தியலிங்கம்.
செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி இப்போது புதுச்சேரியில் நடந்து வரும் ரெங்கசாமி தலைமையிலான அரசு ஊழல் மலிந்த அரசு என் குற்றம் சாட்டினார். அதே போல புதுச்சேரி மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். பாரதிய ஜனதா கட்சியின் சின்னத்தையும் பாண்டிச்சேரி மக்கள் புறக்கணித்ததாக சொன்னார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த முடிவு தான் 2026ல் ரெங்கசாமி மற்றும் பாஜகவுக்கும் கிடைக்கும் என சொன்னதோடு, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகத் தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் அமைந்துள்ளது என்றார். அதோடு ரெங்கசாமி தலைமையில் புதுச்சேரியில் நடந்து வரும் அரசு, பாஜகவிற்கான அரசு என்றார்.