india
ஆள் எடுக்கப் போறாங்க ரயில்வேயில்…அப்ளை பண்ண ரெடியாகுங்க…ஆன்- லைன்ல விவரங்கள பாத்துக்குங்க.
தனி மனித ஒழுக்கம், ஆற்றலை வளர்க்கவும். உணர்ந்து கொள்ளவும் கல்வி ஒரு ஆயுதமாக இருந்து வருகிறது. இன்றைய மாணவர்கள். இளைஞர்கள் பலரும் கல்வியின் அவசியத்தை நன்கு உணர்ந்தவர்களாகவே இருந்தும் வருகின்றனர். படிப்பு தான் தங்களை உயர்த்தும் என்பதை தெரிந்தவர்களாகவும் இருக்கின்றனர். கற்றலின் முடிவு வேலை வாய்ப்புகளை எளிதாக்கவும் உதவுகிறது. அதிலும் அரசுத் துறைகளில் பணிபுரிய கல்வித்தகுதி என்பது அவசியமான ஒன்றாக இருந்து வருகிறது.
மாநில அரசின் பணிகளில் அமர்வது ஒரு விதமான நிறைவு கொடுத்து வருகிறது. அதே போல மத்திய அரசுப் பணிகள் வேறு சில விதமான உயர்வுகளை தந்து உதவுகிறது. மத்திய அரசின் ரயிவேத் துறையில் பணியில் அமர்வது பலரின் கனவாக இருந்து வருகிறது.இந்திய ரயில்வேயில் உள்ள ஏழாயிரத்து தொல்லாயிரத்து ஐம்பத்தி ஓரு (7951) காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் குறித்தும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ரயில்வேத் துறை.
ஜூனியர் எஞ்சினியர், டிப்போ மேற்பார்வையாளர், ரசாயனம் & உலோகவியல் உதவியாளர் உள்ளிட்ட பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணக்கும் விவரங்களை தெரிந்து கொள்ள https.//www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது.
விண்ணப்ப கால அவகாசமாக ஜூலை முப்பதாம் தேதி (ஜூலை 30) முதல் ஆகஸ்டு இருபத்தி ஒன்பது ( ஆகஸ்ட் 29) வரையாக உள்ளது. இந்த பணிகளுக்கு ஊதியமாக முப்பத்தி ஐந்தாயிரத்து நானூறு ரூபாய் (ரூ.35,400/-) முதல் நாற்பத்தி நான்காயிரத்து தொல்லாயிரம் ரூபாய் (ரூ.44,900/-) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.